வாக்காளர் பட்டியல் - 2023 சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 நவம்பர், 2022

வாக்காளர் பட்டியல் - 2023 சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் - 2023 சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (12.11.2022) நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் திருமதி.வி.ஷோபனா இஆப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:


தருமபுரி மாவட்டத்தில் கடந்த 09.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,25,692 ஆண்களும், 6,11,258 பெண்களும், 176 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,37,126 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர் எனவும், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 878 வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட 1,485 வாக்குச்சாவடிகள் உள்ளது எனவும், மொத்தம் 1485 வாக்குசாவடி நிலைய அலுவலர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிளும் உள்ள மொத்தம் 878 வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட 1,485 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் இன்று நடைபெற்றுள்ளன. மேலும், நாளை 13.11.2022, ஞாயிற்றுக்கிழமை அன்றும், வருகின்ற 26.11.2022 சனிக்கிழமை மற்றும் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது.


இந்த சிறப்பு முகாம்களில் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி 01.01.2023 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்கள் (அதாவது 31.12.2004 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள்) வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க கோரி விண்ணப்பிக்கலாம்.


தருமபுரி மாவட்டத்தில் சுமார் 67,000-க்கும் மேற்பட்ட இளம் புதிய வாக்காளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் அனைவரைவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வாக்காளர்களாக சேர்ப்பதோடு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளையும் மேற்கொள்ள உரிய படிவங்களை பெற்று அவற்றையும் முழுமையாக வாக்காளர் பட்டியிலில் மேற்கொண்டு தருமபுரி மாவட்டத்தில் முழுமையான, தூய்மையான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தருமபுரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் திருமதி.வி.ஷோபனா இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


முன்னதாக தருமபுரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் திருமதி.வி.ஷோபனா இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சமயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரூர் வட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு இன்று நேரில் சென்று வாக்காளர் பட்டியல்-2023 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 


அப்போது இவ்வாக்குச்சாவடி மையங்களில் இருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து படிவங்களும் தயார் நிலையில் இருக்கின்றதா என்பதை கேட்டறிந்தார்கள். மேலும் இம்முகாமிற்கு வருகைத்தரும் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கான உரிய படிவங்களையும் வழங்குவதோடு, அவற்றை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அப்படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, தருமபுரி வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.வி.இராஜசேகரன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா சுகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.எச்.சௌகத்அலி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், அரூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி.கனிமொழி, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியர் திரு.சுப்பிரமணியன் உட்பட அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad