பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜூன், 2022

பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை.

மாதிரி படம்.
தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  ஒன்றியம், மூலம் 400 க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  சங்கம் இயங்கி வருகிறது.

இதில். பாப்பிரெட்டிப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, பையர்த்தம், மோளையானூர், மெணசி, உள்ளிட்ட கிராமப்புறங்களில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  சங்கம் இயங்கி வருகிறது .இதன் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தினம் தோறும் பால் ஊற்றி வருகின்றனர். இந்த சங்கத்திற்கு தலைவர், துணைத் தலைவர், மற்றும் இயக்குனர்கள் உள்ளனர். சங்கத்தில் இயக்குனர்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் கொரோனா தொற்றால் சங்க இயக்குனர்கள் நிர்வாக குழு கூட்டம் நடத்த (போர்டு மீட்டிங்) கடந்த 2021 ஜுலை 10 ந்தேதி முதல் தமிழ்நாடு கூட்டுறவு  பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய கூட்டமைப்பின் ஆணையாளர் தடை விதித்தார்.

இதனால் கடந்த ஓராண்டாக நிர்வாக குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளுடைய பல்வேறு கோரிக்கைகள் மற்றும்  சங்கத்தின் வளர்ச்சி,வரவு செலவு கணக்கு, அன்றாட அவசர தேவைகள் உள்ளிட்ட வைகள் குறித்து விவாதித்து நிர்வாக குழு கூட்டம்  முடிவெடுக்க படாமல் தான் தோன்றி தனமாக  செயல் பட்டு வருகிறது.

இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவரும், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய இயக்குனருமான வேடியப்பன் கூறும் போது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் 17 இயக்குனர்கள் உள்ளனர். 

கோவிட் 19 காரணமாக இந்த இயக்குனர்களின் போர்டு மீட்டிங் கடந்த ஓராண்டு காலமாக நடத்த க்கூடாது என தமிழ்நாடு  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆவின் ஆணையாளரால்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தற்போது கோவிட் 19 தடை உத்தரவு விலக்கபட்டு சட்டமன்றம், பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து, இரயில் போக்குவரத்து, மளிகை கடைகள் முதல் அனைத்து அலுவலகங்களும் செயல்பட துவங்கியுள்ளது. உள்ளாட்சி முதல் அனைத்து சங்கங்களிலும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  ஒன்றியம் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் மட்டும் நிர்வாக குழு கூட்டம் செயல்பட அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் சங்கத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத ஒரு சூழல் உள்ளது. ஆகவே உடனடியாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கூட்டங்களை கூட்ட அரசு உத்தரவு விட வேண்டும். 

என இந்திய குடியரசுத் தலைவருக்கும், தமிழக கவர்னருக்கும் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குனர்கள் சார்பிலும், கிராமப்புற கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  சங்க தலைவர்கள் கூட்டமைப்பு சார்பிலும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.