நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல், 2022 முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தருமபுரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி இஆப., அவர்கள் இன்று (04.02.2022 ) தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்கள்.
தருமபுரி நகராட்சி மற்றும் பல்வேறு பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தா தேவி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகம், மாரண்ட அள்ளி பேரூராட்சி அலுவலகம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள், வேட்பு மனு தாக்கல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதையும், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளையும், வேட்பு மனு தாக்கல் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதையும், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர். ஆர். பிருந்தா தேவி இஆப., அவர்கள் காவல்துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, பணியாளர்கள், அலுவலர்கள், தேர்தல் நடத்தும், காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக