நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1094 பேர் வேட்புமனு தாக்கல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1094 பேர் வேட்புமனு தாக்கல்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல், 2022 முன்னிட்டு தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (04.02.2022) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28.01.2022 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி 04.02.2022 வெள்ளிக்கிழமை இன்றுடன் நிறைவு பெற்றது. வேட்பு மனுக்கள் ஆய்வு 05.02.2022 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 07.02.2022 திங்கட்கிழமை ஆகும். 

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கலுக்கான நிறைவு நாளான இன்று (04.02.2022 ) வரை மொத்தம் 1094 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி நகராட்சி.

தருமபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளுக்கு 215 வேட்பு மனுக்கள் .

பி.மல்லாபுரம் பேரூராட்சி.

பி.மல்லாபுரம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 77 வேட்பு மனுக்களும், 

அரூர் பேரூராட்சி.

அரூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 120 வேட்பு மனுக்களும், 

கடத்தூர் பேரூராட்சி.

கடத்தூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 76 வேட்பு மனுக்களும், 

கம்பைநல்லூர் பேரூராட்சி.

கம்பைநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 100 வேட்பு மனுக்களும், 

காரிமங்கலம் பேரூராட்சி.

காரிமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 97 வேட்பு மனுக்களும், 

மாரண்டஅள்ளி பேரூராட்சி

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 86 வேட்புமனுக்களும், 

பாலக்கோடு பேரூராட்சி.

பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 86 வேட்புமனுக்களும்,

பாப்பாரப்பட்டி பேரூராட்சி.

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 71 வேட்புமனுக்களும், 

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 54 வேட்புமனுக்களும் 

பென்னாகரம் பேரூராட்சி.

பென்னாகரம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளுக்கு 112 வேட்புமனுக்களும், என 10 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 159 வார்டுகளுக்கு 879 வேட்புமனுக்களும் ஆக மொத்தம் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கலுக்கான நிறைவு நாளான நேற்று (04.02.2022 ) வரை மொத்தம் 1094 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) திரு.மாரிமுத்து ராஜ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad