Type Here to Get Search Results !

நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா.

தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக இன்று கெங்களாபுரம் கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு எம் செல்வம் அவர்கள் தலைமை வகித்தார்.  மேலும் மனித உரிமை சங்கத்தை  சார்ந்த திரு செந்தில் ராஜா மற்றும் சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் திரு சரவணன் என்ஜிஓ ஆகியோர் சிறப்புரை வழங்கினார். நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் மேற்பார்வையாளர் திரு ஜி வேல்முருகன் அவர்கள் நோக்க உரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பாகல் பட்டி

பஞ்சாயத்து தலைவர் திரு.முருகன்,  துணைத்தலைவர் ரம்யா குமார்,  வார்டு உறுப்பினர்கள் திரு திருமதி தமிழ் செல்வி, அம்பேத்கர் நற்பணி மன்ற தலைவர் திரு அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற  பெண் குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  இறுதியாக நேரு யுவகேந்திரா அவை சார்ந்த திரு ஹரி பிரசாத் நன்றியுரை வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் பெண் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies