இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கன்னசந்திரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லக்ஷ்மிகாந்த் தலைமைதாங்கி தாங்கினார். மேலும் கால்நடை மருத்துவர், செவிலியர்கள் ,திமுக ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் , ஊர் கவுண்டர் நஞ்சுண்டன், ஊராட்சி துணைத்தலைவர் முனியப்பன், வார்டு உறுப்பினர் லோகேஷ் , மற்றும் திமுக பிரமுகர் சுப்பிரமணி, மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
முகாம்களில், பங்கேற்பவர்களில் சிறப்பான முறையில் கால்நடைகளை பராமரித்து வளர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது. மேற்கண்ட சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்களும் தங்களின் கால்நடைகளுடன் பங்கேற்றனர்.
.gif)
