கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையக்கொத்தூர் கிராமம், 120 வீடுகளை கொண்ட இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளையும் ஆர்ஓ மையம், கிராமம் முழுவதும் பாதுகாப்பு சிசிடிவி கேமராக்களை இந்த கிராம மக்களே நிதி வசூலித்து செய்துக்கொள்கின்றனர்.
18 வயது நிறம்பிய 420 பேர் உள்ள இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் அவர்கள் தலைமையிலான இளைஞர்கள் கிராம மக்களிடம் அச்ச உணர்வை போக்கி அவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வால் அனைவருமே இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதுக்குறித்து கிராம மக்கள் கூறுகையில்:
கொரோனா ஊரடங்கின்போதும் எங்களுக்குள்ளே வரையறைகளை வகுத்துக்கொண்டு கிராமம் விட்டு பிற பகுதிக்கு செல்லாமல் இருந்ததால் இதுவரை கிராமத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லாத கிராமமாகவும் தற்போது 100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமம் என்று பிற கிராமங்களுக்கு உதாரணமாய் திகழ்வதாக பெருமை தெரிவித்தனர்.
.gif)
