Type Here to Get Search Results !

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-2022ஆம்  ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்கத்தகுதிகள் 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்கவேண்டும், ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்கவேண்டும். வட்டாச்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500/- மருத்துவப்படி ரூ.500/- அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.


நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.08.2021க்குள் அளிக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies