பாலக்கோடு, மே 27-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தைச் சேர்ந்த பெலமாரனஹள்ளி ஊராட்சியின் கிருஷ்ணன்கொட்டாய் கிராமத்தில் வாழும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் குடிநீர் பிரச்சினையால் அவதிப்படுகின்றன. மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் 8.04 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தொட்டி கட்டி முடிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் இந்தத் தொட்டிக்கு ஒகேனக்கல் குடிநீர் இன்னும் வழங்கப்படவில்லை.
கோடை காலம் தொடங்கியுள்ள இந்த நிலையில், வறட்சி மற்றும் வெப்பம் அதிகரித்து வருகிறது. கிராம மக்கள் தங்களின் அன்றாட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தொலைதூரம் சென்று தண்ணீர் கொண்டுவர வேண்டிய கடினமான நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் பலமுறை தனி அலுவலரிடம் இந்தப் பிரச்சினை குறித்து மனு செய்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கிராம மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக