பாலக்கோடு, மே 27-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பெல்ரம்பட்டி கிராமத்தில், திமுக கட்சியில் இருந்த 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைதுறை அமைச்சருமான திரு கே.பி.அன்பழகன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில், கணபதி ஊராட்சியைச் சேர்ந்த அண்ணாதுரை தலைமையில் சக்திவேல், தருண், சாந்தகுமார், திலீப், தமிழரசன், செல்வம், சக்திவேல் உள்ளிட்ட பலர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து வரவேற்கப்பட்டது.
இதில், பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் புதூர் சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர் அண்ணாமலை, நிர்வாகிகள் கண்ணன், வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்வு, அதிமுகவின் உள்ளூர் வளர்ச்சிக்கான முன்னேற்றத்தையும், கட்சியில் மக்கள் நம்பிக்கை மீண்டும் நிலைபெறும் வகையிலும் காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக