Type Here to Get Search Results !

பாலக்கோடு கடைவீதியில் காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்க்கு ஆதரவு திரட்டிய பாமக MLA lக்கள்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உள்ள வணிகர்களிடம், காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி அக்டோபர் 4ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் அரை நாள்  கடை அடைப்பு போராட்டத்திற்க்கு பாமகவினர் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பாமக மாநில கெளரவதலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பாலக்கோடு, கடைவீதி, பேருந்து நிலையம், எம்.ஜிரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களிடம் காவேரி உபரி நீர் திட்டத்தின் அவசியம் குறித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்தும், இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ள அரைநாள் கடை அடைப்பு போராட்டத்தை முழு ஆதரவு தர வேண்டி நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டினர்.


அது சமயம், மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, நகர செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில்துரை,  மற்றும் நிர்வாகிகள் பாலாஜி, ராஜவேல், வி.எம்.சேகர், கே.இ.கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில்துரை,  மற்றும் நிர்வாகிகள் பாலாஜி, ராஜவேல், வி.எம்.சேகர், கே.இ.கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணி, மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் சிலம்பு பிரகாஷ், பொப்பிடி முருகேசன், மாதையன், வேடி, ராஜா , சான்பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies