Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் தீவிர வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தீவிர வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் திரு.ரமணி தலைமையில் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். வாக்களிப்பதின் அவசியம், வாக்களிப்பு இயந்திரம் பயன்படுத்த வேண்டிய முறைகள் குறித்து துணை வட்டார அலுவலர் திரு.ரமணி பேசினார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் திரு.கார்த்திகேயன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு.ராஜா, அனைத்து இந்திய கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனர் திரு.சென்னையன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


100கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் திரு.பாரதிதாசன் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies