Type Here to Get Search Results !

வரும் 3ஆம் தேதி தீவீர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 03.03.2024 நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அது போலவே 03.03.2024 அன்று நடைபெறும் முகாமில் 1,33,280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்கள் நகராட்சி பகுதியில் 20 முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்பட்டுள்ளன.


இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,083 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.


சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 17 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.


எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் 03.03.2024 அன்று இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், அனைத்து அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தருமபுரி மாவட்டம் போலியோ நோய் இல்லாத மாவட்டமாக இருக்க இந்த தீவிர பல்ஸ் போலியோ முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies