தருமபுரி – சேலம் பிரதான சாலையில் ஏமகுட்டியூர் பிரிவு செல்லும் சாலையில் நேருநகர் அருகில் தடுப்பு சுவர் அமைத்து, சாலையை அகலப்படுத்தி 1.4 கிலோ மீட்டர் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், தடங்கம் கவுன்சிலர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர் சக்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஒ.கே.எஸ்.குமார், பா.ம.க மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் ரெ.மு.மனோகரன், ஒன்றிய செயலாளர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஊடகப் பேரவை ஒன்றிய செயலாளர் மோகன்குமார், மற்றும் நிர்வாகிகள் குண்டுமணி, கண்ணதாசன், குமார் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக