தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஸ்ரீ வினாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் GK.மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, அபீன் போன்ற பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் வட்டாட்சியர் செளகத்அலி,பாமக பொதுக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் நகர செயலாளர் ஜிம் செந்தில்குமார்,நகர தலைவர் சந்தோஷ், மற்றும் வினாயகா கல்வி நிறுவனத்தினை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக