புதிதாக தமிழக அரசால் துவக்கப்பட்ட செழிப்பு என்ற பெயரில் பசுமை உரம் தயாரிப்பிற்க்கு உரிமம் பெறபட்டது குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் 100 சதவீதம் குப்பைகளை பிரித்து வழங்க மன்ற உறுப்பிணர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையாய கடமையாக செய்ய வலியுறுத்தப்பட்டது.
குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவில் முடித்து தண்ணீர் விநியோகம் செய்யவும், மத்திய மாநில நிதியை பெற்று வளர்ச்சி பணிகள் செய்யவும், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய் பிரச்சனை, தெருக்களில் பழுதாகி உள்ள மின் விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக