பாலக்கோட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமமுக கட்சி அலுவலகம் திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 ஜூன், 2023

பாலக்கோட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமமுக கட்சி அலுவலகம் திறப்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி அலுவலக திறப்பு விழா இன்று நகர செயலாளர் ஞானம் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு வேட்டி, துண்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தலைமை எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அதன் வெற்றிக்கு பாடுபட வேண்டும், பூத் வாரியாக வாக்காளர்களை ஒருங்கினைத்து கட்சியில் இணைக்க பாடுபட வேண்டும். அமமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பேசினார்.


இந்நிகழ்ச்சியில் அரூர் முன்னாள் எம்.எல். ஏ. முருகன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், சிறுபான்மை மாவட்ட செயலாளர் மசியுல்லா, மாவட்ட தலைவர் முத்துசாமி, காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad