தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் மண்டபத்தில் நில தரகர்கள் நல சங்க நகர தலைவர் சண்முகம் இல்ல திருமண விழாவில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நல சங்க அகில இந்திய தலைவர் விருகை கண்ணன் இன்று கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வாதித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசு பத்திரவுபதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்கள், நிலத்தரகர்கள், பத்திர எழுதுபவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என தெரிவித்துள்ளதை எங்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் அரசாங்கத்திற்க்கு வருவாய் ஈட்டி தருவதில் எங்கள் சங்கம் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. பொதுமக்களுக்கும், பாமர மக்களுக்கும் நிலம் வாங்குவது விற்பதில் உறுதுனையாக இருந்து பத்திர பதிவு வரை நாங்கள் துனை செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் மட்டும் லட்சகணக்கான நிலத்தரகர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். இந்நிலையில் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் பேச்சு கண்டனத்திற்குரியது. நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு நிலத்தரகர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என கூறியதை சங்கம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்க்கு ஒன்றிய தலைவர் நயாஸ் அகமது, மாவட்ட துணை தலைவர் குமரவேல், நகர செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பீமன், மாவட்ட செயலாளர் அப்புசாமி மாவட்ட பொருளாலர் ரமேஷ், தொகுதி தலைவர் முருகானந்தம், மாநில அமைப்பாளர் பாலசுப்ரமணியம், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக