ஒடசல்பட்டி கூட்ரோடில் இருந்து தின்னப்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் தினமும் மது அருந்துகிறார்கள், இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்கள் அந்த வழியாக செல்ல பயப்படுகிறார்கள், கிராம இளைஞர்கள் விழிப்புணர்வு பலகைகள் வைத்தாலும் அதை புடிங்கி எரிந்து விட்டு மீண்டும் குடிக்கிறார்கள்,
இதற்கு பெரும்பாலும் காரணம் ஊராட்சி நிர்வாகமும் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் கள்ள சந்தையில் விற்கும் மதுவும் தான் காரணம். ஏதேனும் அசம்பாவீதம் நடக்கும் முன் இதற்கு ஒரு தீர்வு காணுமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிகிறோம் என தின்னப்பட்டி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் இதை பற்றி மனுவாக கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள்புகார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக