கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான படிப்புக்கால பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 ஜூன், 2023

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான படிப்புக்கால பயிற்சி.


தருமபுரி மாவட்ட மைய நூலகம், அரசு கலைக்கல்லூரி மற்றும் ஶ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி இணைந்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான படிப்புக்கால பயிற்சி (Internship Programme) மாவட்ட மைய நூலகத்தில் 19.06.2023 அன்று முதல் 06.07.2023 வரை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் ஶ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக் கொண்டனர். 


இந்நிகழ்வில் முதல் நிலை நூலகர் திரு.இரா.மாதேஸ்வரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம் அவர்கள், ஶ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திருமதி மா.புவனேஸ்வரி அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்பயிற்சியில் வாசிப்பை சுவாசிப்போம்” எனும் தலைப்பில் தலைமை ஆசிரியர் மா.பழனி அவர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களது பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு நாளிதழ்கள் மற்றும் நூலக நூல்கள் வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கைப்பேசியை விடு  புத்தகத்தை எடு என்னும் சொல்லுக்கிணங்க மாணவர்கள் தங்கள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் வாழ்வில் சிறப்பானதொரு நிலையை அடைய முடியும் என்று சிறப்புரை ஆற்றினார்.  


இந்நிகழ்வின் நிறைவாக இரண்டாம் நிலை நூலகர் ந.ஆ.சுப்ரமணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad