தருமபுரி மருத்துவ கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் நல்லாம்பட்டி தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் சிலம்பம் போட்டியில் 7பேர் தங்க பதக்கமும், 4பேர் வெள்ளி பதக்கமும், ஒருவர் வெண்கல பதக்கமும் பெற்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி,சாந்தி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீஃபன் ஜேசுதபாதம் அவர்கள், மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் திருமதி சாந்தி அவர்களும், முதன்மை கல்வி அலுவலர் திரு .குணசேகரன் மற்றும் தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக