மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் இரா.மணி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். ஐந்து வயது முடிந்த அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். மாணவர்களின் கல்வி நலனுக்காக அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற்றோர்களும் மாணவர்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பயனடைய வேண்டும். இடை நிற்றல் இல்லாத நிலையினை அனைவரும் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும்.


மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நிலையினை பெற்றோர்கள் அறிந்து கொள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்துரையாடல் வேண்டும் எனக் கூறினார். இக்கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வி. மாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் க. கங்கா பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி கல்பனா திலகவதி ராஜேஸ்வரி ரேக்கா, சத்துணவு அமைப்பாளர் அம்பிகா ஊர் பொதுமக்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாணவர்கள் முக்கிய தெருக்களின் வழியாக சேர்ப்போம் சேர்ப்போம் பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் நம் பள்ளி நம் பெருமை என்ன முழக்கமட்டவாறு விழிப்புணர்வு பேரணியில் சென்றனர். மாலையில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நான் முதல்வன் திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக