பென்னாகரம் சட்டமன்ற தொகுதி எறங்காடு கிராமத்தில் புதிய பகுதி நேர நியாயவிலை கடையை பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி மக்கள் கட்சி பொதுக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பென்னாகரம் கூட்டுறவு சங்க தலைவர் கூத்தப்பாடி இரவி மற்றும் பாமக மூத்த நிர்வாகி துரைராஜ், ஒன்றிய செயலாளர் ராசா உலகநாதன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக