குப்பைகளை அள்ளிய MLA; வேடிக்கைபார்த்த அதிகாரிகள் - பென்னாகரத்தில் பரபரப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜூன், 2023

குப்பைகளை அள்ளிய MLA; வேடிக்கைபார்த்த அதிகாரிகள் - பென்னாகரத்தில் பரபரப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன இதில் 12 வார்டுகள் திமுகவும் 2 வார்டுகள் அதிமுகவும் 2 வார்டுகள் பாமகவும் 2 வார்டுகள் தேமுதிகவும் வார்டு கவுன்சிலர் ஆக உள்ளனர். இந்த நிலையில் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லிபுரம் சந்தப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம்  கடைவீதி வட்டாட்சியர் அலுவலகம் சுண்ணாம்பு காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகள் அதிகமாக தேங்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். 

இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும்  பேரூராட்சி தலைவரிடமும் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதனை தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்  ஜிகே மணி இடம் பொதுமக்கள் குற்றம் சாட்டவே கட்சித் தொண்டர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வீதி வீதியாக நடந்தே சென்று குப்பைகள் சாலை நெடுகிலும் இருப்பதைக் கண்டு அவரே முன்வந்து  குப்பையை அல்ல தொடங்கினார். அது மட்டுமல்லாமல் சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுகளை மண்வெட்டியால் வாரி அப்புறப்படுத்தினார். 


இந்த நிகழ்வில் பென்னாகரம் பேரூராட்சி  தலைவர் வீரமணி,  பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், பாமக பொதுக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் ஜிம் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் ராசா உலகநாதன் நகர தலைவர் சந்தோஷ், நகர செயலாளர் ஜீவா, பாட்டாளி சமூக ஊடக பேரவை அன்பு பென்னாகரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad