கருத்தரங்கில் முதலாவதாக துறைத்தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர், சிவலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார். கருத்தரங்கின் தலைமை உரையாக கல்லூரியின் தாளாளர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிந்தராஜ் ஜி அவர்கள் இந்த தேசியக் கருத்தரங்கம் இன்றைய உலகமயமாக்க சூழலில் கணிதவியலின் சிறப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை இந்த தலைமுறை மாணவர்களுக்கு அவசியம் தெரிந்துக் கொள்ள இங்கு வந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் வழிகாட்டுதல்கள் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரையும் வாழ்த்தி தலைமை உரையாற்றினார்.

கல்லூரியின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. தனபால் அவர்கள் மாணவிகளுக்கு பை (π) தினவிழா வாழ்த்துக்களை கூறி இந்த தேசியக் கருத்தரங்களின் மூலம் பல்நோக்கு திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டும் என அனைவரையும் வாழ்த்திக் கூறினார். கருத்தரங்கில் கலந்துக் கொண்டுள்ள சிறப்பு விருந்தினர்களின் தன் விபரங்களை பேராசிரியை முனைவர். உஷாராணி அவர்கள் விளக்கிக் கூறினார்.
முதல் அமர்வில் கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர், முனைவர். ஜோதிபாசு மெய்யெண்கள் மற்றும் சிக்கல் எண்கள் பற்றியும் அதன் பயன்பாடு அவசியத்தையும் எடுத்து விளக்கினார். இந்நிகழ்வில் பை (π) தின கொண்டாட்டம் முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டி, வினாடி வினா, கணித மாதிரிகள் மற்றும் பருவத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கோப்பைகளை முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
இரண்டாவது அமர்வின் சிறப்பு விருந்தினர் கர்நாடக மாநிலம், பெங்களூரு, அலையன்ஸ் பல்கலைக்கழக, மேலாண்மைத் துறையில் பணிபுரியும் புள்ளியியல் பேராசிரியர், திரு. மோகனசுந்தரம் அவர்கள் இன்றைய வணிகத்தில் புள்ளியியலின் பயன்பாடுகள் குறித்து எளிதாக மாணவிகளுக்கு புரியும் வகையில் விரிவாக எடுத்துரைத்தார். கருத்தரங்கின் நிறைவாக, கணிதவியல் பேராசிரியை, ஸ்ரீ சர்மிளா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கு அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கணிதத்துறை சார்ந்த பேராசிரியர்கள், மற்றும் கணிதத்துறை மற்றும் மேலாண்மைத் துறை மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக