பாலக்கோடு மத்திய ஒன்றியம் சீரியன அள்ளி கிராமத்தில் திமுக கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 மார்ச், 2023

பாலக்கோடு மத்திய ஒன்றியம் சீரியன அள்ளி கிராமத்தில் திமுக கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா.

பாலக்கோடு மத்திய ஒன்றியம் பேவு அள்ளி ஊராட்சி சீரியன அள்ளி கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக சொந்த கட்டிடம் கட்டுவதற்காக திமுக தலைமைக் கழகத்தின் பெயரில் வாங்கப்பட்ட நிலத்தில் தற்பொழுது சீரியன அள்ளி திமுக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களால் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலைஞர் அறிவாலயம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 


இந்த கட்டிட திறப்பு விழாவிற்கு கிளைச் செயலாளர் குபேந்திரன் முன்னிலை வகித்த நிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பழனியப்பன் அவர்கள் தலைமையேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, அலுவலகம் அருகே வைக்கப்பட்டுள்ள புதிய கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் முனியப்பன், வழக்கறிஞர் கோபால், அன்பழகன், பாலக்கோடு பேரூராட்சி தலைவரும் பேரூர் கழக செயலாளருமான முரளி, மாவட்ட வழக்கறிஞர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் முனிரத்தினம் குமார், அழகு சிங்கம், முத்துசாமி, சாமனூர் ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் இராஜாமணி, பொருளாளர் குமார், மாவட்ட தொண்டர் அணி தன்ராஜ், கோவிந்தராஜ் (எ) ரமேஷ், பாரதி, வெங்கடேசன், முருகேசன், சுதா, கோவிந்தராஜ், ராணிசண்முகம்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad