பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோக்களில் அதிவேகத்தில் பயணம்; விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 மார்ச், 2023

பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோக்களில் அதிவேகத்தில் பயணம்; விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் வளரும் நகரங்களில் ஒன்றான பாலக்கோட்டில் 20 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தனியார் மற்றும் அரசு பேருந்து என தினதோறும் சுமார் 200 பேருந்துகளும்,  நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சென்றுவர சுமார் 250 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி இருந்தும்  ஆட்டோக்களில் சுமார் 15 நபர்கள் ஏற்றிச் செல்லுகின்றனர். சிலர் ஆட்களை ஏற்றிக்கொண்டு  சரக்கு வாகனங்களைப் போன்று தக்காளி, காய்கறி, சிமெண்ட், பூசா மூட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் ஏற்றி செல்லுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோ களால் பேருந்து ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad