தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பென்னாகரம், நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் இணைந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்விற்கு தருமபுரி நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் பரஞ்சோதி நிகழ்விற்கு தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர்கள் முனைவர் இம்தியாஸ், முனைவர் தமிழரசு முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு கருத்துரையாளராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி, கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் பேசினர்.நல்லாசிரியர் பழனி பேசுகையில் "மழைநீரை வீணாக்காமல் நன்முறையில் பயன்படுத்த வேண்டும். பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது மழைநீர் அதனை முறையாக சேமிக்க வேண்டும்.
அடுத்த உலகப்போராக குடி போராக அமையும் என்றார் அதனால் அனைவரும் மழைநீர் சேகரிக்க வேண்டும் என்றார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேசுகையில் "நீரின்றி அமையாது உலகு வள்ளுவர் வாக்கு இணங்க எதிர்கால தலைமுறைகள் சிறப்புடன் வாழ மழைநீர் சேகரிப்பு அவசியமானதாக அமைகிறது. நீரை சீக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்." மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிறைவாக நேரு யுவகேந்திரா அமைப்பை சார்ந்த ஹரி பிரசாந்த் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சதீஷ், பெருமாள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக