பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மானவர் தமிழக ஹாக்கி அணியின் தலைவராக தேர்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 மார்ச், 2023

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மானவர் தமிழக ஹாக்கி அணியின் தலைவராக தேர்வு.


பாலக்கோடு அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி முன்னாள் மானவர் தமிழக ஹாக்கி அணியின் தலைவராக தேர்வு, முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி பெருமிதம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  பாலக்கோடு அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி முன்னாள் மானவர் சீனிவாசன் தமிழக ஹாக்கி அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பள்ளிக்கு பெருமை அளிப்பாக முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தென்னிந்திய அளவிலான ஜூனியர் ஹாக்கி  போட்டிகள் மார்ச் 19 முதல் மார்ச் 26 வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் தமிழக அணிக்காக சீனிவாசன் என்ற ஹாக்கி வீரர் தேர்வாகி இருந்தார். சீனிவாசன் அவர்கள் பாலக்கோடு  அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் மணவராவர். இப்பள்ளிக்காக  ஆக்கி அணியில்  பலமுறை விளையாடி மாநில அளவில் சாதனை படைத்து பெருமை சேர்த்தவர்,


தற்பொழுது இராமநாதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தென்னிந்திய அளவிலான தமிழக அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பாலக்கோட்டிற்க்கும், இப்பள்ளிக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

சீனிவாசன் அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், அறிவழகன், இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


மேலும் தொடர்ந்து நடைபெறும் தெலங்கானா, கர்நாடகா அணிகள் உடனான  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad