இந்நிகழ்ச்சிக்கு 11 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் சத்யா சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார், இதில் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு 15,வது வார்டு மற்றும் 11 வது வார்டில் கட்சி கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி 200 பெண்களுக்கு தென்னங்கன்று மற்றும் சேலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து மாரண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், வழக்கறிஞர் கோபால், அடிலம் அன்பழகன், பாலக்கோடு பேரூராட்சி தலைவரும் பேருர் கழக செயலாருமான முரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் முருகன், விவசாய அணி குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், பேரூராட்சி அவைத் தலைவர் செங்கல் மணி, கிளைச் செயலாளர் செந்தில்குமார், அன்பழகன், சந்திரன், ஆரிப் ஜான், விஜயலட்சுமி, வசிஷ்டர், சிராஜ் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக