தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் நான்காம் நாள் நிகழ்வில் களப்பணியாக இன்று காலை குண்டலபட்டி கோவில் வளாகம் தூய்மை செய்யப்பட்டது. தொடர்ந்து கருத்துரை நிகழ்வில் முதல் நிகழ்வாக பெரியார் பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியரும் மற்றும் துறைத் தலைவருமான முனைவர் ஜெயராமன் அவர்கள் 'தூய்மை பசுமை வலிமை இந்தியாவில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் இன்றைய கால சூழலில் இந்திய இளைஞர்கள் தூய்மையை பேணுதலிலும் தங்களை வலிமைப்படைத்தராக ஆக்கிக் கொள்வதிலும் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து இரண்டாவது கருத்துரை நிகழ்வாக திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் பே சுரேஷ் அவர்கள் 'உறவின் உன்னதம்' என்ற தலைப்பில் உரையாற்றினார் இன்றைய கால சூழலில் மனித உறவுகளில் ஏற்படும் விரிசல்களை எவ்வாறு சரி செய்ய வேண்டும், உறவைக்காத்து உன்னத மனிதநேயம் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.
ஊர் பிரமுகர் திரு ஹரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவன் பழனிசாமி அனைவரையும் வரவேற்றார். இறுதியாக மாணவி இளம்பருதி நன்றி உரையாற்றினார். நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான முனைவர் கோவிந்தராஜ் ஒருங்கிணைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக