விழாவில் தலைமை உரையாகக் கல்லூரியின் தாளாளர் மூகாம்பிகை திரு. கே. கோவிந்தராஜ் ஜி அவர்கள் இயற்பியல் துறை நவீன அறிவியலின் அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தும், மிகுந்த வளர்ச்சி அடைந்த துறையாக விளங்குகிறது. மாணவிகளின் முன்னேற்றத்திற்காக நமது நிர்வாகம் சார்பாக தென்கொரியா கியூங்பூக் தேசிய பல்கலைகழகம் மற்றும் நமது நாட்டின் சிறந்த பல்கலைக்கழகத்திலிருந்தும் துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்து மாணவிகள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். நமது கல்லூரியில் ஆய்வகங்களும், நூலகமும் மாநகரங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறி அனைவரையும் வாழ்த்தி தன்னுடைய தலைமை உரையை நிகழ்த்தினார்.
வாழ்த்துரையாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர் த.இரகுநாதன் அவர்கள் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கருத்தரங்குகள் நடைபெறுவது வழக்கமானது ஆனால், இந்த ஆண்டு இயற்பியல் துறை மிகச்சிறந்த ஆராய்ச்சி சாதனையாளர்களை சிறப்பு விருந்தினர்களாகக் கொண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது மிகவும் பாராட்டிற்குரியது. இயற்பியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவிகள் அறிந்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வை பெறுவதற்கு இதுபோன்ற கருத்தரங்குகளில் சிறப்புரையாற்றும் விருந்தினர்கள் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்கள் இதனை உங்கள் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்.
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் திரு. S. உதயகுமார் அவர்கள் நமது கல்லூரி மாணவிகள் உலக அளவில் சாதிக்கவும், பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் இப்பன்னாட்டு கருத்தரங்கம் ஒரு தூண்டுகோலாக அமைத்துக்கொள்ளவும் என வாழ்த்தினார். இணை ஒருங்கிணைப்பாளர் திரு. M. தனபால் அவர்கள் இயற்பியல் துறையில் நமது இந்திய நாட்டை சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் தவிர்க்க முடியாத பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள்.
குறிப்பாக இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் ஐயா அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இயற்பியல் துறையில் இன்னும் பல சாதனைகளை நமது மாணவிகள் நிகழ்த்த நமது கல்லூரி இது போன்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளை வழங்குகிறது என வாழ்த்தி பேசினார். இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி. வினோத் அவர்கள் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புகளை எடுத்தியம்பி மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

கருத்தரங்கின் முதல் அமர்வில் சிறப்பு விருந்தினர் தென்கொரியாவின் புகழ்பெற்ற கியூங்பூக் தேசிய பல்கலைகழகத்தின், உயர் ஆற்றல் இயற்பியல் துறை பேராசிரியர், முனைவர். D. ஜோசப் டேனியல் “அதிக அடர்த்தி கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி கதிர்வீச்சு கண்டறிதலின் பயன்பாடுகள்” என்ற தலைப்பிலும். இரண்டாவது அமர்வில் S.R.M பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர், முனைவர் N. கருணாகரன் "படிகங்களின் தொழில்நுட்ப முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மூன்றாம் அமர்வில் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருள் அறிவியல் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர், முனைவர் M. முரளிதரன் அவர்கள் “ஸ்பின்ட்ரோனிக் சாதனங்களுக்கான காந்த குறைகடத்திகளின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில், சிறப்புரை ஆற்றினார். இக்கருத்தரங்கில், கல்வி பயிலும் காலத்திலேயே மாணவிகளின் திறன்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படும் வகையில் இயற்பியல் துறையின் முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவை சேர்ந்த 17 மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் காணொளிக்காட்சி மூலம் தங்களின் ஆய்வுச் சிந்தனையை தகைசால் சான்றோர் அவையில் உரையாற்றியது சிறப்புக்கும், பாராட்டுக்கும் உரியதாகும்.
விழாவில் கலந்துகொண்ட மாணவியர்களுக்கு முதல்வர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள். இந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் இயற்பியல் துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள், கல்லூரியின் பிற துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு கருத்தரங்கத்தினை சிறப்பித்தார்கள்.
விழாவின் நிறைவாக முதுகலைப் பிரிவை சேர்ந்த மாணவி செல்வி சரண்யா அவர்கள் கருத்தரங்கிற்கு வருகைப்புரிந்த அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக