மகேந்திரமங்கலம் பெரிய தப்பை கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயிக்கு அடி உதை; தப்பியோடிய குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 மார்ச், 2023

மகேந்திரமங்கலம் பெரிய தப்பை கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயிக்கு அடி உதை; தப்பியோடிய குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.


தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பெரியதப்பை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி  சின்னசாமி (வயது 38 ) இவருடைய தந்தை  நாகராஜ் என்பவருக்கும் தர்மபுரி அருகே உள்ள அன்னசாகரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு நிலம் சம்மதமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக பாலக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வரும் நிலையில்,  நேற்று மாலை   நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் உள்ள தேங்காய் மற்றும் மாட்டு தீவிணபுல்லை ஏழுமலை, ஶ்ரீ குமார்  மற்றும் அடையாளம் தெரியாத 5 நபர்கள் சேர்ந்து வெட்டி சேதப்படுத்த உள்ளனர்.

இதனை தட்டி கேட்ட சின்னசாமியை, ஏழுமலை மற்றும் அவரது கூட்டாளிகள் இரும்பு ராடால் தாக்கியதில் சின்னசாமியின் நெற்றி மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக ஏழுமலை மற்றும் கூட்டாளிகள் தப்பியோடினர்.


அருகில் இருந்தவர்கள் சின்னசாமியை மீட்டு   பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சின்னசாமி மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார், இது குறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad