பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. 2023 வன நாளின் முக்கிய கருப்பொருளான காடுகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த கருத்துக்கள் மாணவர்களிடையே கலந்ரையாடல் மூலம் நடைபெற்றது.

இயற்கையை சீரழிக்காமல் வனங்களை பாதுகாப்பது வன உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தருவது மற்றும் மரங்களை நட்டு வளர்ப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை தலைமை ஆசிரியர் மா. பழனி வழங்கினார்.
உலக வன நாள் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, இராஜேஸ்வரி, ரேகா, வானவில் மன்ற கருத்தாளர் பிரியா மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக