தனது உரையில் நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்வோம் எனவும் தானும் கல்லூரி காலங்களில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவனாக இருந்து பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு இருக்கிறேன் என்பதையும் எடுத்துரைத்து சிறப்பாக பணியாற்றி வரக்கூடிய மாணாக்கர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நேரு யுகேந்திரா திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் அவர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துரையை வழங்கினார். நிறைவாக பள்ளி வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது.
முன்னதாக ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்ற விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்று பேசினார். இறுதியாக செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் தலைவர் காமராஜ் நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக