பென்னாகரம் தொகுதி பாப்பாரப்பட்டி பெரிய ஏரி சுதந்திரத்திற்கு பிறகு நீண்ட காலமாக தூர் வாரப்படாமல் படர்தாமரையும், குப்பை கூலங்களும் கொட்டி ஏறியே தெரியாமல் இருந்து வந்தது. இந்த ஏரியை தூர்வாரப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை இதை சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும், அமைச்சர்களிடமும், துறை அதிகாரிகளிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல் கட்டமாக ரூபாய் 2 கோடியே 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

35 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரி சுத்தப்படுத்தி ஆழப்படுத்துவதோடு 1246 மீட்டர் நீளத்திற்கு நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு 10அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பாமக மாநில துணை தலைவர் பாடி செல்வம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், மேற்கு மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சத்தியமூர்த்தி, பென்னாகரம் தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன், பென்னாகரம் நகர தலைவர் சந்தோஷ், பென்னாகரம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெற்றி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக