பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் ப.சி.சிவக்குமார், இளைஞர் சங்க மாவட்டத் தலைவர் து.சத்தியமூர்த்தி, அன்புமணி தம்பிகள் படை செயலாளர் ரா.கார்த்திகேயன், தலைவர் மா.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

வருகின்ற 29.01.2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00 மணியளவில், தருமபுரி டி.என்.சி.விஜய் மகாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் நலம் விரும்பிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நடுவண் அரசின் மேனாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மரு.அன்புமணி இராமதாஸ் MP., அவர்கள் சந்தித்து கலந்துரையாட உள்ளார்கள் அதுசமயம் மாவட்டத்திற்கு வருகைத் தரும் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது, நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அனைத்து நிலை நிர்வாகிகளை பங்கேற்க செய்து கூட்டத்தை சிறப்பிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் முன்னாள் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஆ.அன்பழகன், முன்னாள் இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் தகடூர்தமிழன், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள் சந்தோஷ்குமார், சின்னசாமி, சிவகுரு, சந்தோஷ், பசுமை தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன் மாணவர் சங்க மாவட்ட தலைவர் சத்திரிய பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.