தமிழ்நாடில் உள்ள கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைத்து, தொழிற் பயிற்சிகள் வழங்குதல், சழூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செய்படுத்துவது கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர்நல வாரியத்தின் சீரிய நோக்கமாகும்.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கைம்பெண் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதன்படி தருமபுரி மாவட்டத்தில் கைம்பெண் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பப்படிவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடுதல் கட்டடத்தில் உள்ள மாவட்ட சழூகநல அலுவலகத்தில் ( 04342 / 233088) பெற்று பூர்த்தி செய்து 05.12.2022 க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக