தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 நவம்பர், 2022

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்.


கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, 2022-2023 ஆம் நிதியாண்டில் 5-8 / 9-12 / 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி, 9-12 / 13-16 ஆகிய வயது பிரிவில் மாவட்ட கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் பாரட்டுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில், அப்பாவு நகரில் உள்ள, நகராட்சி துவக்கப்பள்ளியில் 27.11.2022 அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு குரலிசைப் போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நடனப் போட்டி நடைபெறும்.


குரலிசைப் போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. நாட்டுப்புற நடனப்போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்கால்குதிரை, தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும். 


மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். 


மேலும் விவரம் வேண்டுவோர் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0427 2386197 அல்லது 94865-23986 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப, அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad