தருமபுரி தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

தருமபுரி தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா.


தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர்கள் (இளைஞர்களுக்கு) இளைஞர் திறன் திருவிழா வரும் சனிக்கிழமை (12.11.2022) அன்று நடைபெற உள்ளது.

எனவே இளைஞர் திறன் திருவிழாவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் 12.11.2022 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நல்லம்பள்ளி, வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவில் நல்லம்பள்ளி வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண் / பெண் / மாற்றுத்திறனாளிகள் / திருநர்கள்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


எனவே, வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர்கள் மேற்கண்ட தேதியில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad