ஒசஅள்ளி ஊராட்சி வேடியூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

ஒசஅள்ளி ஊராட்சி வேடியூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு..


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம்   ஓசஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வேடியூர் ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் கிருஷ்ணா கண் மருத்துவமனை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஒச அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கண் சிகிச்சை முகாமில் கண்புரை,  கண்னில் நீர் வடிதல், கண் சதை வளர்ச்சி, ஒற்றைத் தலைவலி, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, போன்ற கண் சம்பந்த நோய்களை கண்டறிந்து  நோயாளிகளின் கண்ணின் தன்மை கண்டறிந்து  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் போசிநாயக்கனஅள்ளி, புதுப்பட்டி, கோடியூர், அண்ணா நகர், பெருமாள் கோவில் பட்டி, வேடியூர் உள்ளிட்ட கிராம பகுதியைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பொதுமக்கள் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad