சூதாட்ட செயலியால் மீண்டும் ஒருவர் பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

சூதாட்ட செயலியால் மீண்டும் ஒருவர் பலி.

தர்மபுரியை சேர்ந்தவர் சரண்(22). இவர், மயிலாப்பூர் ராக்கியப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் 2வது மாடியில் தங்கி சிஏ படித்து வந்தார். இவருடன் சக மாணவர்கள் 4 பேர் தங்கி உள்ளனர். உடன் தங்கி இருந்த 4 பேரும் தீபாவளிக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு வரவில்லை. இதற்கிடையே சரண் மட்டும் இரண்டு தினங்களுக்கு முன் சொந்த ஊரில் இருந்து வந்து தனது அறையில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சரண் தந்தை வடிவேல் இரவு 10.30 மணிக்கு மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் சரண் போன் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளர் வெங்கடேஷ் என்பவருக்கு போன் செய்து, தனது மகன் குறித்து கேட்டுள்ளார்.

இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் வெங்கடேஷ், இரவு சரண் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்த போது, அறையின் மின்விசிறி கொக்கியில் கயிறால் தூக்கில் தொங்கியது தெரிந்தது. இதுகுறித்து சரண் தந்தை வடிவேலு மற்றும் மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். 

போலீசார், சரண் உடலை மீட்டு ராயப்பேட்டை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து,  சரண் தங்கி இருந்த அறையில் இருந்து தற்கொலைக்கான கடிதம், செல்போனை ஆய்வு செய்த போது, மாணவன் சரண், தனது செல்போனில் கோல்டு காயின்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் பணம் வைத்து விளையாடியது தெரியவந்தது. அதில் அதிகளவில் பணத்தை கோல்டு காயின்ஸ் விளையாட்டில் இழந்ததும், இதற்காக பலரிடம் சரண் கடன் வாங்கி இருந்ததும், வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad