இப்பயிற்சியில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு கு. குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் மற்றும் தொடக்கநிலை மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்துவதில் தன்னார்வலர்களின் பங்கு ஆகியவை குறித்து தன்னார்வலர்களுக்கு விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி கட்டகத்தை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் திரு. முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குறு வள மையங்களில் நடைபெற்ற பயிற்சியை உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரவிக்குமார் , உதவித் திட்ட அலுவலர் திருமதி.மஞ்சுளா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் 110 குறுவள மைய பள்ளிகளில் நடைபெற்ற தொடக்கநிலை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான குறைதீர் கற்றல் பயிற்சியில் 4200 தொடக்கநிலை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக