தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் - தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 நவம்பர், 2022

தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் - தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

 

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி ஜோதி மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.சேகர், தர்மச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ரேனுகாதேவி, ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி துரைசாமி, நடராஜன், வேலுமணி, சோலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேட்டு வரவேற்று பேசினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி கட்சி பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தீர்மானங்கள் குறித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். வருகிற 27-ம் தேதி கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும். விழாவையொட்டி கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கியும், நலத்திட்டங்கள் வழங்கியும் கொண்டாட வேண்டும். 


மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்கும், தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தமைக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான பி.பழனியப்பன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்  இன்பசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, சபரிநாதன், கருணாநிதி, மடம்முருகேசன், செல்வராஜ், பேரூராட்சி செயலாளர்கள் வீரமணி, சண்முகம் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் கவுதமன், பொன் மகேஸ்வரன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad