புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தில் இரத்ததான சேவை, பசிக்குதா வாங்க சாப்பிடுங்க, ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்யும் அமரர் சேவை, கல்விச் சேவை, காப்பகங்களுக்கான சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மற்றும் பல சேவைகளை செய்து வரும் மை தருமபுரி அமைப்பினரை கௌரவிக்கும் விதமாக டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை மை தருமபுரி அமைப்பினர் அகம் மகிழ்ந்து சிரம் தாழ்த்தி மனமகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர். மை தருமபுரி அமைப்பில் சமூக சேவகர் மதிப்புறு முனைவர் இரா.சதீஸ் குமார், சமூக சேவகர் ப.தமிழ்செல்வன், சமூக சேவகர் ஞா.அருணாசலம், சமூக சேவகர் ல.அலெக்ஸாண்டர் மற்றும் சமூக சேவகர் மரு.உ.முஹம்மத் ஜாபர் ஆகியோருக்கு திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பின் சார்பாக மதிப்புறு முனைவர் திரு.புதவை சரவணன் அவர்களால் அப்துல் கலாம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மை தருமபுரி அமைப்பின் சேவைக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு தங்கத் தட்டோ, வெள்ளித் தட்டோ தேவையில்லை எங்கள் தோழ் தட்டி மேலும் ஊக்குவிக்கும் உங்கள் கைத்தட்டே போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக