தேசிய ஒருமைப்பாட்டு நாள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கமலநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 நவம்பர், 2022

தேசிய ஒருமைப்பாட்டு நாள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கமலநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கமலநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை அம்சவேணி தலைமையில் நடைபெற்றது. 


நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி சார்பில் அவர் கணவர் பெரியசாமி, சாமிசெட்டிபட்டி ஊராட்சி தலைவர் திருமதி கந்தம்மாள் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை,பேச்சு ஓவியப்போட்டி மில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழாவினை சிறப்பித்தார்.நிகழ்வில் வார்டு உறுப்பினர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் மாதையன், முன்னாள் வார்டு உறுப்பினர் காமராஜ், கமலநத்தம் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மணிவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 100க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad