விவசாய நிலத்தில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்த முதியவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

விவசாய நிலத்தில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்த முதியவர் கைது.

மாதிரி படம்.

தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தர்மபுரி மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் போலீசார்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில்   கஞ்சாசெடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி  கிராமத்தில் நடத்திய சோதனையில், பச்சியப்பன் (60) என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தது தெரிய வந்தது. 


உடனடியாக போலீசார் பச்சியப்பனை கைது செய்து அவரிடமிருந்த 12 ஆயிரம் மதிப்புள்ள  கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad