தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனை எதிரே முனியப்பன் கோவில் தெருவில் காலை, மாலை இருவேளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இந்த வழியை பயன்படுத்திவருகின்றனர். தற்போது பருவமழை காலம் என்பதால் இந்த தெரு சேறும் சகதியுமாக உள்ளது இதனால் இதன் அலியே பயணிப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலையை ஆய்வு செய்து உடனடியாக சீரமைத்து தருமாறும், மேலும் இந்த குறுகியவழிச் சாலையில் மாலை, காலை இருவேளைகளில் விபத்து ஏற்படும் வகையில் இளைஞர்கள் இருசக்கர வாகனம் அதிவேகத்தில் வலம் வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இந்த தெருவில் குறைந்தது முன்று வேக தடை அமைத்து அமைக்கவும், மேலும் இந்த தெருவில் உள்ள பழுதடைந்த மினி தண்ணீர் தொட்டி பழுது பார்த்து மீண்டும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி பேரூராட்சி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக