இதுகுறித்து மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சி, கிருஷ்ணகிரி மெயின் சாலையில் ஆவின் வளாகம் அருகில் உள்ள உழவர் சந்தை நாள்தோறும் காலையில் சுமார் 140- க்கும் மேற்ப்பட்ட கடைகளை கொண்டு செயல்பட்டு வருகின்றது. இக்கடைகள் காலை 5.00 மணிக்கு தொடங்கி காலை 11.00 மணி வரை நாள்தோறும் செயல்பட்டு வருகின்றன.

இதில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற வேளாண் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக உழவர் சந்தைக்கடைகள் மூலம் தாங்களே விற்பனை செய்து வருவதால், விவசாயிகளுக்கு இதன் மூலம் அதிக இலாபம் கிடைத்து வருகின்றது. மேலும், குறைந்த விலையில் தரமான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட வேளாண் உற்பத்தி பொருட்கள் பொதுமக்களுக்கும் எளிதில் கிடைக்கின்றது.
எனவே இந்த உழவர்சந்தைகள் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஆவின் வளாகம் அருகில் உள்ள உழவர் சந்தையில் நாள்தோறும் காலை சுமார் 30 முதல் 35 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் சுமார் 40 டன்னிற்கும் மேற்பட்ட அளவில் விற்பனையாகின்றன.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி வட்டம், தருமபுரி நகராட்சி, கிருஷ்ணகிரி மெயின் சாலையில் ஆவின் வளாகம் அருகில் உள்ள உழவர் சந்தையில் சோதனை அடிப்படையில் மாலை நேர உழவர் சந்தை கடைகள் இன்று முதல் மாலை 4.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை நாள்தோறும் செயல்படுகின்றன. முதல் கட்டமாக 25 மாலை நேர உழவர் சந்தை கடைகளில் இந்த வேளாண் பொருட்கள் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த மாலை நேர உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் விற்பனை பொருட்களான தேன், சத்துமாவு, பிஸ்கட்ஸ், ஸ்னாக்ஸ், ஜாம், சாஸ், கெட்ச்அப் மற்றும் ஊறுகாய் வகைகள் மற்றும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உள்ளிட்ட வேளாண் உற்பத்தி பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றது.
எனவே தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி வட்டம், தருமபுரி நகராட்சி, கிருஷ்ணகிரி மெயின் சாலையில் ஆவின் வளாகம் அருகில் உள்ள உழவர் சந்தையில் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் இந்த மாலைநேர உழவர் சந்தையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, குறைந்த விலையில் தரமான பொருட்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றையும் வாங்கி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது தருமபுரி வருவாய்க் கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், துணை இயக்குநர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திரு.கணேசன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் திரு.எஸ்.இளங்கோவன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக