அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை மாநில அளவில் தேர்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 நவம்பர், 2022

அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை மாநில அளவில் தேர்வு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது இந்த பள்ளியில் மொத்தம் 850 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 


இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சிவலிங்கம் உடற்கல்வி ஆசிரியராக குப்பாகவுண்டர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட அளவில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மாங்கரை பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிற்க்கு தேர்வாகியுள்ளனர். கைப்பந்து விளையாட்டில் 16 பெண்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாடியதற்கு தேர்வு ஆகியுள்ளனர் இவர்கள் நாமக்கலில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் கலந்து கொள்கின்றனர். 


அதேபோல் கைப்பந்து போட்டியில் 16 ஆண்கள் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளனர் இவர்கள் செங்கல்பட்டில் கைப்பந்து போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதேபோல் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம் போட்டியில் ஆறு பேர் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வு உருவாகி உள்ளன இவர்கள் அரியலூர் நடைபெறும் சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர் இவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். 


இதேபோல் மாவட்ட அளவில் நடைபெற்ற அதிவிரைவு மிதிவண்டிப் போட்டியில் நான்கு பேர் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகி உள்ளனர் இவர்கள் அரியலூரில் நடைபெறும் மிதிவண்டி போட்டியில் கலந்து கொள்கின்றனர். 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு இரண்டு பேர் மாநில அளவில் தேர்வை உள்ளனர் இவர்கள் திருவண்ணாமலையின் நடைபெறும் ஓட்டப்பந்தையப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். 


உன் அட்வான்ஸ் இதேபோல் மாவட்ட அளவில் நடைபெற்ற கம்பு ஊண்டி தாண்டுதல் போட்டியில் ஒரு மாணவி வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகி உள்ளனர் இவர் திருவண்ணாமலையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். மாங்கரை அரசு பள்ளி மாணவ மாணவிகள் வட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு 150 சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 


வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி  மாணவர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை துணையாசிரியர் செல்வம், முனுசாமி, தாவரவியல் ஆசிரியர் கணேசன் உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் பென்னாரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் ஆகியவர்கள் காதலாழ்ந்து கொண்டு வெற்றி பெற்றவர்களே பாராட்டினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad